கோவையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

கோவையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்
X
கோவை மாநகரில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது

ஏசு கிறிஸ்து உயிர்த்தெழும் நிகழ்வை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். நேற்று இரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி கோவை மாநகரில் உள்ள காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், உப்பிலிபாளையம் இம்மானுவேல் ஆலயம், டவுன்ஹால் புனித மைக்கேல் ஆலயம், திருச்சி ரோடு கிறிஸ்துநாதர் ஆலயம், புலியகுளம் அந்தோணியார் ஆலயம் உள்பட கிறிஸ்தவ தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

இந்த திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதியில் இருந்து துவங்கிய தவக்காலத்தில் பல்வேறு தவ முயற்சிகளை, கிறிஸ்தவ மக்கள் மேற்கொண்டனர். அசைவ உணவு தவிர்ப்பது, தேவையற்ற செலவினங்களை தவிர்ப்பது, மது, புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் அதை தவிர்ப்பது, எளிய வாழ்க்கை வாழ்வது, அனைவரிடத்திலும் அன்பு காட்டுவது, பகைவனையும் நேசிப்பது என, ஒழுக்கம், கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகளை மேற்கொண்டனர்.

செலவினங்களை தவிர்த்த சேமிப்பின் மூலம் கிடைத்த தொகையை ஏழைகளுக்கு வழங்கினர். இந்த பண்புகளை வாழ்நாள் முழுக்க கடைபிடிக்க முயற்சிக்க வேண்டும்.பாவத்தில் இருந்து மக்கள் விடுபட வேண்டும் என்பதற்காக மனிதாக மண்ணில் வாழ்ந்த ஏசு, சாவை வென்றார். நம் வாழ்க்கையிலும் நீதி, சமத்துவம், மனித நேயம் உயிர்ப்பெற வேண்டும் என்பதைதான் ஈஸ்டர் பெருநாள் உணர்த்துகிறது, என்றனர்.

ஈஸ்டர் பண்டிகையையொட்டி கோவை காந்திபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயத்தில் ஆயர் டேவிட் பர்ணபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலியின் போது ஏசு கிறிஸ்துவின் உயிர்ப்பு நிகழ்வு தத்ரூபமாக நிகழ்த்தி காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் தங்களது ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

ஈஸ்டர் பண்டிகையை யொட்டி அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்து ஆலயங்கள் முன்பும் மாநகரின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!