கல்லீரல் செயலிழந்தவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை மையம் கோவையில் துவக்கம்

கோவையில் துவங்கப்பட்டு உள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம்.
அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும், மன உளைச்சலால் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்வோருக்கும் உடலில் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் உறுப்புகளில் சிறுநீரகமும், கல்லீரலும் முக்கியமானதாக உள்ளது.
இதில், கல்லீரல் செயலிழப்பு என்பது இந்தியாவில் நிகழும் இறப்புகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக, இன்றைய காலக்கட்டத்தில் தற்கொலையினால் உயிரிழக்கும் பெரும்பாலோனோர் விஷம் அருந்தியே உயிரிழக்கும் சூழல் உள்ளது.
அதற்கு முக்கிய காரணமாக விஷம் அருந்தியவுடன் ஏற்படும் கல்லீரல் பாதிப்பையே மருத்துவர்கள் கூறி வருகின்றனர். கல்லீரல் பாதிப்புக்கு தமிழகத்தில் குறிப்பிட்ட சில மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை வசதிகள் உள்ளன.
இந்நிலையில் தமிழகத்தின் மேற்கு மண்டலப் பகுதியில் முதன் முறையாக கோவை கே.எம்.சி.எச்.மருத்துவமனை வளாகத்தி்ல், கல்லீரல் தொடர்பான அனைத்து நோய்களையும் குணப்படுத்துவது மற்றும் மாற்று கல்லீரல் தேவைப்படும் நோயாளிகளுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் துவக்கப்பட்டு உள்ளது,
இதற்கான துவக்க விழா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நல்லா பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. பிரத்யேக கல்லீரல் செயலிழப்பு சிகிச்சை பிரிவை தமிழக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் துவக்கிவைத்தார்.
தொடர்ந்து ஐஜி சுதாகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்திற்கு பிறகு சிறிய அளவிலான பிரச்னைகளுக்கும் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயல்பவர்களை காப்பாற்றுவதில் பெரும் சவாலாக உள்ளன.
கல்லீரல் சிகிச்சையில், கோவையில் தற்போது துவங்கப்பட்டு உள்ள கல்லீரல் செயல் இழந்தவர்களுக்கான பிரத்யேக சிகிச்சை மையம் குறிப்பாக விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றவர்களை காப்பாற்ற பெரிய அளவில் உதவியாக இருக்கும் என ஐஜி சுதாகர் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu