/* */

காரமடையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம்

மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். எனக் கோரி காரமடையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்

HIGHLIGHTS

காரமடையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக  போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் 

மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சியில் நிரந்தர தூய்மை பணியாளர்கள் 38 பேர் மற்றும் சுயஉதவி குழுக்கள் மூலம் தற்காலிக தூய்மைப்பணியாளர்கள் 137 பேர் என மொத்தம் 175 பேர் பணியாற்றி வருகின்றனர்.

நகராட்சியில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம் நகராட்சி சார்பில் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. கடந்த மே 8-ம் தேதி முதல் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் திருப்பூரைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஜெயசூர்யா எண்டர்பிரைசஸ் மூலம் பணியாற்றி வருகின்றனர். தற்போது ஒப்பந்ததாரர் மூலமாக ரூ.507 கூலியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பிஎப், இஎஸ்ஐ பிடித்தம் போக பணியாளருக்கு ரூ.392 கிடைக்கும்.

தங்களுக்கு மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.606 சம்பளமாக வழங்க வேண்டும் என ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாத ஊதியமாக மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.606 வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காரமடை நகராட்சி அலுவலக வளாகத்தில் நேற்று மாலை முதல் பாஜக வடக்கு மாவட்ட துணை தலைவரும், நகராட்சி உறுப்பினருமான விக்னேஷ் தலைமையில் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் கனகராஜ், மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி, உள்ளாட்சி ஊழியர் சங்கப் பொதுச்செயலாளர் ரத்தினகுமார், இன்ஜினியரிங் சங்க பொருளாளர் சுப்ரமணியம், அ.தி.முக கவுன்சிலர் வனிதா சஞ்ஜீவ் காந்தி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காரமடை நகராட்சி ஆணையர் பால்ராஜ், காவல் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து எங்களின் பிரச்சினைக்கு தீர்வு காணும் வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் கூறுகையில்:

கடந்த மே 8-ம் தேதி முதல் ஒப்பந்ததாரர் மூலமாக எங்களை பணிக்கு எடுத்ததாக நகராட்சி தெரிவித்தது. அதற்கு முன்னர் செய்த பணிக்கான ஊதியத்தை மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ரூ.606 வழங்க வேண்டும். ஆனால் நகராட்சி தரப்பில் இஎஸ்ஐ,பிஎப் பிடித்தம் போக ரூ.392 மட்டுமே கிடைக்கும் என கூறப்படுகிறது. எனவே மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க வேண்டும். அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்றனர்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் பால்ராஜ் கூறும்போது, நகராட்சி சட்ட விதிகளின்படி ஒப்பந்ததாரர் மூலமாக ரூ.392 மட்டுமே வழங்கப்படும். இது நகராட்சியின் அரசாணை. ஒப்பந்த தூய்மைப்பணியாளர்களின் போராட்டம் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றார்.

Updated On: 13 Jun 2023 3:14 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: சீமான் செய்தியாளர் சந்திப்பு | #Seeman #NTK #SrilankanTamils...
  2. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  5. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  6. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  7. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  8. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  9. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு