கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல்: ஆட்சியர் கிரந்திகுமார் வெளியிட்டார்
வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர் கிரந்தி குமார் பாடி
கடந்த ஜனவரி 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி கோவை மாவட்டத்தில் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான விண்ண்பங்கள் பெறப்பட்டு அதன் பேரில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் ஆட்சியர் கிரந்திகுமார் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியலில் கோவை மாவட்டத்தில் 14,96,770 ஆண் வாக்காளர்கள், 15,51,665 பெண் வாக்காளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் 569 என மொத்தம் 30,49,004 வாக்காளர்கள் உள்ளனர்.
சட்டமன்றத் தொகுதிவாரியான வாக்காளர் எண்ணிக்கை விவரம் வருமாறு:-
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 1,44,937 ஆண் வாக்காளர்கள், 1,55,569 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 47 பேர் என மொத்தம் 3,00,553 வாக்காளர்கள் உள்ளனர்.
சூலூர் சட்டமன்ற தொகுதியில் 1,54,788 ஆண் வாக்காளர்கள், 1,63,157 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 73 பேர் என மொத்தம் 3,18,018 வாக்காளர்கள் உள்ளனர்.
கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 2,26,790 ஆண் வாக்காளர்கள், 2,28,583 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 114 பேர் என மொத்தம் 4,55,492 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் 1,65,671 ஆண் வாக்காளர்கள், 1,64,827 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 39 பேர் என மொத்தம் 3,30,537 வாக்காளர்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 1,61,736 ஆண் வாக்காளர்கள், 1,66,097 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 131 பேர் என மொத்தம் 3,27,964 வாக்காளர்கள் உள்ளனர்.
கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் 1,20,480 ஆண் வாக்காளர்கள், 121641 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 32 பேர் என மொத்தம் 242153 வாக்காளர்கள் உள்ளனர்.
சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 1,60,653 ஆண் வாக்காளர்கள், 1,64,126 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 30 பேர் என மொத்தம் 3,24,803 வாக்காளர்கள் உள்ளனர்.
கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதியில்1,61,826 ஆண் வாக்காளர்கள், 1,68,853 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 42 பேர் என மொத்தம் 3,30,720 வாக்காளர்கள் உள்ளனர்.
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியில் 1,07,016 ஆண் வாக்காளர்கள், 1,16,772 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 41 பேர் என மொத்தம் 2,23,829 வாக்காளர்கள் உள்ளனர்.
வால்பாறை சட்டமன்ற தொகுதியில் 92,873 ஆண் வாக்காளர்கள் 1,02,040 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர்கள் 20 பேர் என மொத்தம் 1,94,935 வாக்காளர்கள் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu