வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்: ஆட்சியர் கிரந்திகுமார் அறிவிப்பு
கோவை ஆட்சியர் கிரந்தி குமார் பாடி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கிரந்திகுமார் வெளியிட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தத்திற்கான சிறப்பு சுருக்க திருத்த பணிகள் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் மேற்கொள்ளப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் முகாம்கள் அடுத்த மாதம் 4, 5 ஆகிய தேதிகள் மற்றும் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
எனவே, 01.01.2024 அன்று 18 வயது பூர்த்தியானவர்கள் மற்றும் புதியதாக பெயர் சேர்க்க, வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய மற்றும் பெயர்கள் நீக்கம் செய்ய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்ய 09.12.2023 வரை மனுக்கள் பெறப்படும் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu