ஈமு கோழி மோசடி வழக்கில் தீரன் சின்னமலை பேரவைத் தலைவர் யுவராஜ்க்கு 10 ஆண்டு சிறை
பைல் படம்.
கடந்த 2012 ம் ஆண்டில் ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட சுசி ஈமு கோழி நிறுவனத்தை தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் தலைவர் யுவராஜ் மற்றும் வாசு, தமிழ்நேசன் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்த 121 பேரிடம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட பழனிச்சாமி என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலிசார் 3 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவையில் உள்ள முதலீட்டார் நல பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் தீரன் சின்னமலை பேரவை மாநில தலைவர் யுவராஜ், வாசு, தமிழ்நேசன் ஆகிய மூன்று பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைதண்டணையும் , மூன்று பேருக்கும் சேர்ந்து 2.47 கோடி அபராதமும் விதித்து முதலிட்டாளர் நல நீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.ரவி தீர்ப்பு வழங்கினார். இதில் தமிழ்நேசன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத்தால் அவருக்கு பிணையில் வரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கபட்டது.
சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பட்டியல் இன இளைஞர் கோகுல்ராஜ் என்பவரை ஆணவக்கொலை செய்த வழக்கில் யுவராஜ் முக்கிய குற்றவாளி என்பதும் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் குறிப்பிடதக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu