கோவையில் குட்கா விற்பனை புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்

கோவையில் குட்கா விற்பனை புகார்களுக்கு வாட்ஸ் ஆப் எண் அறிமுகம்
X

மாவட்ட ஆட்சியர் சமீரன் 

குட்கா விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் அனுப்பலாம்

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பது தொடர்பாக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இது தொடர்பான ஆலோசணைக் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் நடைபெற்றது. இதில் உணவு பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர் குட்கா விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் 9444042322 என்ற என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் அனுப்பலாம் எனவும், புகார் அளிப்பவர்கள் விபரம் இரகசியமாக வைக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குட்கா விற்பனையை தடுக்க 21 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், குட்கா விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!