ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள சிறைவாசிகள் பாரபட்சமின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணை பொது செயலாளர் வன்னியரசு உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அப்போது பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய வன்னிரசு, முந்தைய அரசிடமும் இந்த கோரிக்கை வைத்தோம் என்றும் குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தோம். அதே கோரிக்கையை தற்பொழுது உள்ள முதல்வருக்கும் வைப்பதாக கூறினார். ஆயுள் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யும் பொழுது இஸ்லாமியர்களை விடுதலை செய்யாமல் இருப்பதாக குற்றம் சாட்டினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் உள்ள 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கக் கூடிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதாகவும், இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்று உள்ளதாக தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலை சிறுத்தைகள் இந்த கோரிக்கையை முன்வைத்து வருவதாக கூறினார். தமிழகத்தில் 2548 சிறைவாசிகள் இருப்பதாகவும் அதில் 144 பேர் பெண் சிறைவாசிகள் உள்ளனர். 352 பேர் 14 ஆண்டுகள் கழித்த சிறைவாசிகள் உள்ளனர். உச்ச நீதிமன்றமே 164 விதியின் அடிப்படையில் மாநில அரசுகளே விடுதலை செய்ய முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று கூறியிருக்கும் நிலையில் அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள நீண்ட காலமாக சிறையில் இருக்கக்கூடியவர்களை முதல்வர் முக ஸ்டாலின் விடுதலை செய்ய வேண்டும் என கூறினார்.

குறிப்பாக இஸ்லாமிய சிறைவாசிகள் கடந்த ஆட்சியில் கணக்கெடுப்பின்போது புறக்கணிக்கப்பட்டு விடுதலை செய்யவில்லை என்றும், எனவே இந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாண்டுகளுக்கும் மேலாக உள்ள சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் தற்பொழுது புதிதாக தமிழகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளார் ஆளுநர் ரவி தேசிய இனங்கள் உடைய விடுதலைக்கு எதிரானவர்கள் என்றும் மாநில உரிமைகளுக்கு எதிரானவர் என்றும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு நடத்துவது என்பது குலக்கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது போல் இருப்பதாக தெரிவித்தார். எனவே தமிழக அரசு அமைச்சரவையில் ஒரு தீர்மானத்தை இயற்றி நீட் தேர்வை நடத்த கூடாது என்பதுதான் விடுதலை சிறுத்தைகள் உடைய நிலைப்பாடு என தெரிவித்தார்.

Tags

Next Story