வானதிசீனிவாசனுக்கு ஆதரவு திரட்டும் வடஇந்திய பெண்கள்

வானதிசீனிவாசனுக்கு ஆதரவு திரட்டும் வடஇந்திய பெண்கள்
X

கோயமுத்தூர் தெற்கில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு வட இந்திய பெண்கள் ஆதரவு திரட்டினர்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் வானதி சீனிவாசன் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், தெற்கு தொகுதியில் பல்வேறு இடங்களுக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டு ஆதரவு திரட்டி வருகிறார்.இந்நிலையில் சுக்ரவார் பேட்டை பகுதியில் வட இந்திய பெண்கள் ஆதரவு திரட்டிய நிலையில், இன்று பூ மார்க்கெட் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக அப்பகுதியில் உள்ள வட இந்தியப் பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் "நம்ம ஓட்டு தாமரை" என்று தமிழில் முழக்கமிட்டபடி ஆதரவு திரட்டினர்.

Tags

Next Story