மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தீவிர முயற்சி - கோவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தீவிர முயற்சி -  கோவையில் உதயநிதி ஸ்டாலின் தகவல்
X
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக, உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

கோவை புலியகுளம் பகுதியில், திமுக சார்பில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு கொரோனா நிவாரணமாக மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, பயனாளர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உதயநிதி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டு நான்கு ஆண்டுகளாகி விட்டது. கட்டுமான பணிகளுக்கு கால தாமதமாவதற்கு, அப்போதைய அதிமுக அரசும் ஒரு காரணம். மத்திய அரசும் மாறிமாறி பொய் மட்டுமே கூறி வந்தன.

வெகு விரைவில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்டு வருவதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!