பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ஓட்டிய இந்து அமைப்பினர் 2 பேர் கைது

பெரியார் குறித்து அவதூறு சுவரொட்டி ஓட்டிய இந்து அமைப்பினர் 2 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசன்.

முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை கைது செய்து காட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார். அதை தொடர்ந்து இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம், மாநகர போலீஸ் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் பணி புரியக்கூடிய அதிகாரிகள் சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நேற்று நள்ளிரவு 100 அடி சாலை மற்றும் டாடாபாத் பகுதியில் பெரியாரைப் பற்றி அவதூறாக பாரத் சேனா அமைப்பின் சார்பாக ஒருவர் வால்போஸ்ட் ஒட்டிக் கொண்டிருந்தார். இதை பார்த்த கோவை காந்திபுரம் காட்டூர் காவல் துறையினர் வால் போஸ்டர் ஒட்டிய ரவிகுமார் என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் கோவை மாவட்ட பாரத் சேனா இளைஞர் அணி பொதுச் செயலாளர் முத்துகிருஷ்ணன் 31, என்பவரும் பாரத் சேனா பீளமேடு பகுதி உறுப்பினர் தமிழரசன் வயது 30, என்பவரும் வால்போஸ்டர் என்னிடம் கொடுத்து ஓட்டச் சொன்னதாக அவர் கூறினார். இதைத்தொடர்ந்து முத்துகிருஷ்ணன் மற்றும் தமிழரசனை கைது செய்து காட்டூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா