கோவையில் கொரோனா உதவி மையமாக மாறிய கட்சி ஆபீஸ்!

கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கோவையில் கட்சி அலுவலகம் ஒன்று கொரோனா உதவி மையமாக மாற்றப்பட்டு, பொதுமக்களுக்கு விவரங்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

கோவையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. நேற்று, கொரோனாவின் ஒருநாள் பாதிப்பில், சென்னையை கோவை முந்தியுள்ளது. கோவையில் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கைகள், ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு வழிகாட்ட பல்வேறு தரப்பினரும் உதவி மையங்களை அமைத்து வருகின்றனர். அவ்வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள, தந்தை பெரியார் திராவிடர் கழக அலுவலகம், கொரோனா பேரிடர் உதவி மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இம்மையத்தை தபெதிக மற்றும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்துகின்றனர். இந்த மையத்தை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இம்மையத்தை, 7449110884, 9952579108, 9940766109, 9894323590 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டால் மருத்துவமனைகளில் படுக்கைகள், ஆக்சிஜன் வசதிகள் உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ள முடியும்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!