/* */

கோவை மாவட்டத்தில் இன்று 756 பேருக்கு பெருந்தொற்று: 12 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 756 பேருக்கு பெருந்தொற்று கண்டறியப்பட்டுள்ளது; 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவை மாவட்டத்தில் இன்று 756 பேருக்கு பெருந்தொற்று: 12 பேர் உயிரிழப்பு
X

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. அதேசமயம் கோவையில் மே மாதத்தில் ஏறுமுகத்தில் இருந்த கொரோனா தொற்று பாதிப்புகள், ஜூன் மாதத்தில் குறைந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில் இன்று 756 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால், மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 15 ஆயிரத்து 808 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 7248 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 1151 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 6 ஆயிரத்து 592 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 12 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1968 ஆக உயர்ந்துள்ளது.

Updated On: 24 Jun 2021 2:19 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  2. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்
  4. உலகம்
    இந்தியா நிலவில் தரையிறங்கியபோது பாகிஸ்தானில் நடந்தது என்ன? வைரலான...
  5. சினிமா
    கையில் கட்டுடன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு புறப்பட்ட ஐஸ்வர்யா ராய்
  6. காஞ்சிபுரம்
    மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை சுற்றி சுற்று சுவர் அமைக்க
  7. குமாரபாளையம்
    கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 2740 கோழிகள் தீயில் கருகி...
  8. கோவை மாநகர்
    கேரளா திரைப்பட தயாரிப்பாளர் ஜானி சகாரிகாவை மோசடி வழக்கில் கைது செய்த...
  9. இந்தியா
    வாரணாசியில் வேட்பு மனு நிராகரிப்பு: அழுவதா? சிரிப்பதா? என நகைச்சுவை...
  10. தேனி
    துாய்மைப்பணியாளரின் அன்புள்ளம்..!