கோவையில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி : சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்

கோவையில் வழிபாட்டு தலங்கள் திறக்க அனுமதி : சுத்தப்படுத்தும் பணிகள் தீவிரம்
X

கோவிலில் நடைபெறும் தூய்மை பணிகள்

அனைத்து வழிபாட்டு தலங்களும் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கொரொனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவிய நிலையில் வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இந்நிலையில் கொரொனா தடுப்பு பணிகள் இரு மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்தில் தொற்று கட்டுக்குள் வந்தது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்று பாதிப்பு 500 க்கு கீழாக குறைந்துள்ளது.

இந்நிலையில் நேற்று தமிழக அரசு புதிய தளர்வுகளை அறிவித்தது. இதில் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிழாக்கள் மற்றும் குடமுழுக்கு போன்றவை மட்டும் நடத்தக்கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்ட நிலையில், கோவையில் கோவில்களில் சுத்தப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தண்டுமாரியம்மன் கோவில் ,கோணியம்மன் கோவில் உட்பட கோவையில் உள்ள கோவில்கள் அனைத்தும் சுத்தப்படுத்தும் பணியானது நடைபெற்று வருகின்றது. கோவில் கோபுரங்கள், விக்கிரகங்கள் அனைத்தும் தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்தும் பணிகளில் கோவில் குருக்கள் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று பிற மத வழிபாட்டு தலங்களையும் தயார் செய்யும் பணியில் வழிபாட்டு தல நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story