சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சட்ட விரோத மது கூடங்களை மூட டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர்கள்.

டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை வடக்கு, தெற்கு, திருப்பூர் மாவட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சார்பாக டாஸ்மாக் கோவை வடக்கு டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை பொதுச்செயலாளர் புருசோத்தமன் தலைமையில் நடைபெற்றது. இதில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அதிரடி ஆய்வு என்ற பெயரில் டாஸ்மாக் பணியாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும். அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோதிகளின் அத்துமீறிய செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். சட்டவிரோத மதுக்கூடங்களை உடனடியாக மூட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
ai and future cities