கருணாநிதி, ஸ்டாலின் முகமூடி அணிந்து பெரியாருக்கு மரியாதை செய்த சமூக நீதி கட்சி

கருணாநிதி, ஸ்டாலின் முகமூடி அணிந்து பெரியாருக்கு மரியாதை செய்த சமூக நீதி கட்சி
X

ஸ்டாலின், கருணாநிதி முகமூடியுடன் சமூக நீதி கட்சியினர்.

பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனையடுத்து தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரின் சிலைகள் உள்ள அனைத்து இடங்களிலும் பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்புகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பகுதியிப் உள்ள திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் இருந்து பெரியார் படிப்பகம் வரை மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முகமூடிகளை அணிந்தபடி ஊர்வலமாக சமூகநீதி கட்சி நிறுவன தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் வந்த அக்கட்சியினர் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா