/* */

கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர்: சசிகலாவை ஆதரித்து கோவையில் போஸ்டர்

கோவை மாநகரில், கொங்கு மண்டலத்தை தலைமை ஏற்க வாருன்க்கள் எனம் சசிகலாவிற்கு ஆதரவாக போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு உண்டானது.

HIGHLIGHTS

கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாரீர்: சசிகலாவை ஆதரித்து கோவையில் போஸ்டர்
X

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, ஒட்டப்பட்டுள்ள  போஸ்டர்கள்.

கோவையை சுற்றி ஏற்கனவே கொங்குநாடு குறித்த சர்ச்சைகள் சுற்றி வரும் நிலையில், தற்போது சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, மாநகரின் பல இடங்களில் அமமுகவினர் போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அதில், கொங்கு மண்டலத்திற்கு தலைமை ஏற்க வாரீர் என்று, சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தியாகத் தலைவி சின்னம்மா கொங்கு மண்டலத்தை வழி நடத்த வாருங்கள் என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் நகர் முழுவதும் கண்ணில் படும்படி ஒட்டப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றியடைந்த சூழலில் தற்போது சசிகலா படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

ஏற்கனவே, அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா செல்போனில் பேசி வரும் நிலையில், தற்போது போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதால் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில், இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 July 2021 1:20 AM GMT

Related News

Latest News

 1. லைஃப்ஸ்டைல்
  போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
 2. திருப்பூர்
  திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
 3. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
 4. லைஃப்ஸ்டைல்
  அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
 5. காஞ்சிபுரம்
  திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 6. திருப்பூர்
  ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
 7. லைஃப்ஸ்டைல்
  ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
 8. காஞ்சிபுரம்
  காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
 9. நாமக்கல்
  வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
 10. லைஃப்ஸ்டைல்
  சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்