/* */

தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல்? கோவைவாசிகள் கடுப்பு

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல் நடப்பதாகவும், குறுக்குவழியில் பலர் தடுப்பூசி செலுத்திக் கொள்வதாகவும், பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

HIGHLIGHTS

தடுப்பூசி டோக்கன் வழங்குவதில் விதிமீறல்? கோவைவாசிகள் கடுப்பு
X

கோவையில், தடுப்பூசி முகாம் ஒன்றில் ஊசி போட டோக்கன் பெற்று வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.

கோவை மாவட்டத்தில், மாநகர் பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநகர் பகுதியில் 46 மையங்களில் தலா 200 தடுப்பூசிகள் வீதம் பொதுமக்களுக்கு போடப்பட்ட வருகிறது. அதிகாலை 4 மணியில் இருந்தே தடுப்பூசி போடுவதற்கான டோக்கன்களை வாங்கிக்கொண்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

கோவை மாவட்டத்தில் இதுவரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 243 பேர் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு உள்ளனர். பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள ஆர்வமாக இருந்தாலும், குறைவான தடுப்பூசிகளை அரசு ஒதுக்குவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதனால், தட்டுப்பாடு நிலவுகிறது.

மேலும், தடுப்பூசிகளுக்கு வழங்கப்படும் டோக்கன்களில் விதிமீறல் இருப்பதாகவும், மூன்று நாட்களுக்கு மேலாக அலைந்த பிறகுதான் தடுப்பூசி கிடைத்ததாகவும், பொதுமக்கள் பலர் அதிருப்தியோடு தெரிவித்தனர். நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்றாலும், குறுக்கு வழியில் சிலர் தடுப்பூசி போட்டுச் செல்வதை அதிகாரிகள் அனுமதிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகம், இதை உடனடியாக இதை சரி செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Updated On: 29 Jun 2021 10:44 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!