பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மோட்டார் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி மோட்டார் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, மோட்டர் தொழிலாளர்களின் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து, அதன் விலையை கட்டுப்படுத்த வேண்டும் என, மோட்டார் தொழிலாளர்கள், கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கக்கோரி, தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு, மோட்டர் தொழிலாளர்களின் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைத்து விலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், வாகன கடன் மீதான தவணைகளை ஒத்தி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மேலும் உதிரிபாகங்களின் விலையை குறைக்க வேண்டும் எனவும், அனைத்து ஓட்டுநர்களுக்கும் இலவச தடுப்பூசி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

Tags

Next Story
ai and business intelligence