எந்த திட்டத்தையும் வாங்கி தருவேன் - வானதி சீனிவாசன்

எந்த திட்டத்தையும் வாங்கி தருவேன் - வானதி சீனிவாசன்
X

எந்த ஒரு திட்டத்தையும் வாங்கி வர என்னால் முடியும் என கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

சட்டமன்ற தேர்தலில் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவர் சித்தாபுதூர் பகுதியில் வீடு வீடாக சென்று மத்திய மாநில அரசுகள் செய்த சாதனை திட்டங்களை மக்களுக்கு விளக்கி தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.அப்போது பொதுமக்கள் மத்தியில் வானதி சீனிவாசன் பேசும்போது, தமிழகத்தில் ரவுடியிசம் இல்லாமல் அமைதியான ஆட்சி கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

இந்த ஆட்சி தொடர வேண்டும் என்றால் தமிழகம் வளமாக இருக்க வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் .மத்தியில் மோடி தலைமையில் ஒரு வளமான அரசு உள்ளது. உங்களுக்கு எந்த திட்டத்தை வேண்டுமானாலும் வாங்கி வர என்னால் முடியும். வலிமை வாய்ந்த வேட்பாளராக நான் இருக்கிறேன். இந்த தொகுதிக்கு என்ன வேண்டுமோ என்னால் மத்திய, மாநில அரசிடமிருந்து நான் வாங்கி தருவேன் என்றார்.

Tags

Next Story