காய்கறிகள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

காய்கறிகள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
- நடமாடும் காய்கறி வாகனங்களை அதிகரிக்க கோரிக்கை.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலை காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தினமும் வரும் இந்த காய்கறி வாகனங்களில் மக்கள் அவர்களுக்கு அன்றாடம் தேவையான காய்கறிகளை வாங்கி வருகின்றனர்.

கோவையிலும் இந்த நடமாடும் காய்கறி வாகன சேவையானது செயல்பட்டு வருகிறது. மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அரசின் சார்பிலும் தனியார் வியாபாரிகள் சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் மக்களுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூட்டங்களை தவிர்ப்பதற்காக இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்று ஒருபுறம் கூறினாலும், இதை வாங்குவதற்கு மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில் கோவை உக்கடம் கெம்பட்டி காலனி பகுதியில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் காய்கறி வாங்குவதற்காக அப்பகுதி பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து காய்கறிகளை வாங்கி சென்றனர். இந்த காய்கறிகளை வாங்குவதற்கு முதியவர்களும் நீண்டநேரம் காத்திருப்பதால் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படுவதாகவும், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படுவதாகவும் எனவே இந்த காய்கறி வாகனங்களை அதிகப்படுத்தி மக்களுக்கு விரைந்து காய்கறிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.




Tags

Next Story