நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா மனு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி பெண் விடுதலை கட்சி தலைவர் சபரிமாலா மனு

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மனு அளிக்க வந்த சபரிமாலா.

அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசுத்தலைவர், பிரதமர், அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்படும்.

நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துக் கொண்ட அனிதா உயிரிழந்து 4 ஆண்டு நிறைவடைந்துள்ளது. அவரது நினைவு தினமான இன்று பெண் விடுதலை கட்சி நிறுவன தலைவரும் முன்னாள் அரசு பள்ளி ஆசிரியருமான சபரிமாலா கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனிதா நினைவு நாளில் அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி குடியரசு தலைவர், பிரதமர், அனைத்து ஆளுநர்களுக்கும் இந்த கடிதம் அனுப்பப்படும். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்ற மகிழ்வில் இருந்த நிலையில், நீட்தேர்வு அறிவிப்பு என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கு அனிதா பெயர் வைப்பது முதல் கடமை இல்லை, அனிதா உட்பட 18 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்ததை நினைவில் வைத்திருக்கிறோம். முதலில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தவர், இப்போதும் இந்த ஆட்சி மீது நம்பிக்கை உள்ளதாகவும், நீட் தேர்வு இந்தியா முழுவதும் ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பப்படுவதாகவும், அடுத்தாண்டாவது நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Tags

Next Story