ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

ஓணம் பண்டிகை: கோவையில் நாளை உள்ளூர் விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

கோவை கோப்புக்காட்சி

அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

கேரள மக்களின் முக்கிய பண்டிகையான ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. அம்மாநில எல்லையில் உள்ள கோவை மாவட்டத்தில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.

இதன் காணமாக ஓணம் பண்டிகைக்கு ஆண்டுதோறும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும். இதன்படி ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவையில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார்.

இதற்கு பதிலாக வருகின்ற செப்டம்பர் 11 ம் தேதி பணி நாளாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story