கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை

கோவை மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இல்லை
X

கோப்பு படம்

கோவை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

அதேசமயம் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக அவ்வப்போது தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்படுகின்றன. தடுப்பூசி வந்த பின்னர் அப்பணிகள் மீண்டும் நடப்பதுமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், இன்று கோவை மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதேசமயம் கோவை அரசு மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில், கொரோனா தடுப்பூசி வழக்கம் போல் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு