கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகள் விதிப்பு

கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பு: கட்டுப்பாடுகள் விதிப்பு
X

கோவை மாநகர பகுதி

கோவையில் கொரோனா தொற்று அதிகரிப்பதை தொடர்ந்து, கலெக்டர் சமீரன் புதிய கட்டுப்பாடுகளும், சில தளர்வுகளும் விதித்து உத்தரவிட்டுள்ளார்

கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை கோவை மாவட்ட நிர்வாகம் அமல்படுத்தியது. அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து மளிகை கடைகள் ,பேக்கரிகள், காய்கறி கடைகள், டீ கடைகள் இனி காலை 6 மணி முதல் 5 மணி வரை இயங்க அனுமதி. மேலும் மீன் மற்றும் இறைச்சி கடைகள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டும் செயல்படவும், டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் செயல்படவும் அனுமதி .

மேலும் கோவையில் உள்ள அனைத்து மால்களும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட அனுமதி இல்லை எனவும், பொள்ளாச்சி மாட்டு சந்தை இன்று முதல் இயங்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதித்தும் மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்திரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்கள் மற்றும் அருங்காட்சியங்கள் செயல்பட தடை விதித்தும், கோவை மாவட்டத்தில் உள்ள பூங்காக்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்பட தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த புதிய நடைமுறைகள் இன்று காலை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil