/* */

கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு

கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவையில் புதிதாக 206 பேருக்கு கொரோனா தொற்று: 3 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை (பைல் படம்)

தினசரி கொரோனா பாதிப்பில் இன்று சென்னை மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது. இதனால் கோவை இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 11 பேருக்கு குறைவாக தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 206 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 33 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறையத் துவங்கியுள்ளது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 229 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 28 ஆயிரத்து 626 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 3 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2222 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 17 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    'அனல் பறக்கும்': மக்களவை கூட்டத்தொடர் குறித்து பா.ஜ.,வுக்கு...
  2. இந்தியா
    பீகாரில் திறப்பு விழாவிற்கு முன்பே இடிந்து விழுந்த பாலம்
  3. இந்தியா
    நீட் பிரச்சினையில் மௌனம் ஏன்? பிரதமருக்கு ராகுல் காந்தி கேள்வி
  4. சினிமா
    மருமகள் இன்றைய எபிசோட்!
  5. சினிமா
    மல்லி சீரியல் இன்றைய புரோமோ - ஜூன் 19, 2024
  6. சினிமா
    சிங்கப்பெண்ணே சீரியல் அப்டேட்..!
  7. நாமக்கல்
    பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பயனடைந்த 95 ஆயிரம் விவசாயிகள்
  8. மதுரை மாநகர்
    மதுரையில், மறுவாழ்வு முகாம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் நகர தி.மு.க. 13-வது வார்டு சார்பில் ஐம்பெரும் விழா
  10. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையம் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வருவதாக...