கோவையில் மாணவியை கடத்தி திருமணம் : வாலிபர் கைது

கோவையில் மாணவியை  கடத்தி திருமணம்  : வாலிபர் கைது
X
கோவையில் பிளஸ் ஒன் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் பிளஸ் ஒன் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கணபதி இ.பி காலனியை சேர்ந்தவர் பாபு ( 21). அங்குள்ள மட்டன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது, பிளஸ் 1 மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு பாபு, அந்த மாணவியை திருமண ஆசை காட்டி பழனிக்கு கடத்திச் சென்று அங்கு கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர் கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த இளைஞர் மாணவியை கடத்தி திருமணம் செய்து பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுத்துள்ளார் என்பது தெரிய வந்தது. அதனால், பாபுவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்