கோவையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் கணேசன் ஆலோசனை

கோவையில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் கணேசன் ஆலோசனை

கோவையில், தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை செய்த அமைச்சர் கணேசன்.

கோவையில், தொழிற்சங்க பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் அமைச்சர் கணேசன் ஆலோசனை நடத்தினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொழிலாளர் நல வாரியங்களின் செயல்பாடுகள் குறித்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் கலந்து கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் தொழிலாளர்களின் குறைகளை அமைச்சர் கேட்டறிந்தார்.

தொழில்வரி போடப்படுவதை ரத்து செய்ய வேண்டும், வால்பாறையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் அதிகப்படியான ஏடிஎம் எந்திரங்கள் கொண்டு வர வேண்டும் என்பன உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகளை கேட்டுக் கொண்ட அமைச்சர், விரைவில் இது குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வு கூட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் தொழிலாளர் நலதுறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story