கலவர ஸ்பெலிஷ்டுகளை ஒற்றுமையால் முறியடிப்போம்: கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து பிரச்சாரம் செய்ய உத்தரப்பிரதேசத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கோவை வந்திருந்தார். பாஜகவினர் இரு சக்கர வாகனங்களில் காவி கொடிகளை ஏந்தியபடி பாஜகவினர் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் டவுன்ஹால்பெரிய கடைவீதி பகுதியை கடக்கும் போது அங்கே கடைகள் வைத்திருந்த இஸ்லாமியர்களைக் கடைகளை அடைக்க சொல்லி பாஜகவினர் கூறியதால் மோதல் ஏற்பட்டு, கல்வீச்சிலும் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தினை மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோவை தெற்குத் தொகுதி வேட்பாளருமான கமல் ஹாசன் கண்டனம் தெரிவித்தார். "கலவர ஸ்பெலிஷ்டுகளை நாம் ஒற்றுமையால் முறியடிப்போம்" என இந்தச் சம்பவம் குறித்து அவர்கள் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் கல் வீசி தாக்கப்பட்ட வி.எம் காலனியகம் என்னும் செருப்புக் கடைக்கு நேரில் சென்று கடைக்காரரைச் சந்தித்து தனது ஆதரவினை கமல்ஹாசன் தெரிவித்தார். அந்தக் கடையில் தனக்கு காலனிகளும் வாங்கிக்கொண்டார். சமூக நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர். அவர்களிடம் பேசிய கமல்ஹாசன் இரு மதத்தினரிடையே வன்முறையை தூண்டி கலவரத்தை நடத்தி ஆதாயம் பார்க்கலாம் என நினைக்கும் சமூக விரோதிகள் விரைவில் முறியடிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu