கோவையில் 60% வரை தொற்று பரவல் குறைந்துள்ளது:- அமைச்சர் நேரு
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, அமைச்சர் கே.என். நேரு.
கோவை மாநகராட்சியில், கொரொனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று ஆலோசனை மேற்கொண்டார். இதில், அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது கோவையில் 60 சதவீதம் வரை தொற்று பரவல் குறைந்துள்ளது. கரும்பூஞ்சை நோய்க்கு பெரிய மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகள் அரசின் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரொனா தொற்றுக்கு தனியார் மருத்துவமனைகள் அதிகக் கட்டணம் வசூல் செய்வது குறித்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தற்போது அதிக கட்டணம் வசூல் செய்வது கட்டுப்பாட்டில் இருப்பதாக கலெக்டர் தெரிவித்து இருக்கிறார். எல்லா மருத்துவமனைகளுக்கும் சென்று ஆய்வு செய்து அதிக கட்டணம் வசூல் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் தனிமைப்படுத்துதல் முகாம்களில் இருப்பவர்களுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் கூட்டமாக கூடாமல் இருக்க காவல் துறைக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. கோவையில் சூயஸ் குடிநீர் திட்டத்தை ரத்து செய்வது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு எடுக்கும். இது குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu