கட்டபஞ்சாயத்து, மின்வெட்டுக்கு திமுகவுக்கு வாக்களியுங்கள்- ரவி

கட்டபஞ்சாயத்து, மின்வெட்டுக்கு திமுகவுக்கு வாக்களியுங்கள்- ரவி
X

தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள் என பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.

கோயமுத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் கோவை தெற்கு தொகுதிக்கான பாஜக தேர்தல் அறிக்கையை, அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் சி.டி.ரவி வெளியிட்டார்.இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக அகில இந்திய பொதுச்செயலாளர் சிடி ரவி, இந்து கடவுள்களை மட்டுமே ஸ்டாலின் இழிவுபடுத்துகிறார் . வேல் விவகாரத்தில் ஸ்டாலின் நாடகமாடி வருகிறார்.தமிழ்நாடு முன்னேற மோடி, இபிஎஸ் என்ற இரட்டை இன்ஜின் தேவை எனவும், கட்டபஞ்சாயத்து, மின்வெட்டு வேண்டுமென்றால் திமுகவிற்கு வாக்களியுங்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து ஆ.ராசா இழிவாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், பெண்களை இழிவாக பேசுவது தான் திமுகவின் டிஎன்ஏ எனத் தெரிவித்தார். ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் பேசுகிறார் ராகுல்காந்தி எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!