கோவையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்
![கோவையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம் கோவையில் தேசிய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிமுகம்](https://www.nativenews.in/h-upload/2021/03/11/975784-img20210311144654.webp)
வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்திலுள்ள பல்வேறு கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். பெரிய கட்சிகளை போலவே சிறிய கட்சிகளும் வேட்பாளர்களை களத்தில் இறக்கி வருகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் கட்சியின் சார்பாக 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அதன் தலைவர் அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் தேசிய மக்கள் கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கோவை தொண்டாமுத்தூர் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக அன்சாரி, கோவை வடக்கு தொகுதி வேட்பாளராக சுப்பிரமணி, கவுண்டம் பாளையம் தொகுதி வேட்பாளராக மகேஸ்வரன் உட்பட 50 வேட்பாளர்களை அறிவிக்கப்பட்டனர்.
இதில் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் துரையரசன் தலைமையில் செயல் தலைவர் சசி ஆர்வின் ஆலோசனையின்படி அறிவித்தனர். தேர்தலில் அனைத்து தொகுதிளிலும் தனித்து போட்டியிடுவதாகவும், பரப்புரை மூலம் வாக்குச் சேகரிக்க உள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu