கோவை அரசு மருத்துவமனைக்கு 40 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரம் : தொண்டு நிறுவனம் வழங்கல்
கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் தலைமையில் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன
கொரோனா தொற்று பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நோய் தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது.
தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தபட்டு உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள கிவ் இந்தியா மற்றும் ஆக்சன் எய்டு என்கிற தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் ஐந்து லிட்டர் கொள்ளவு கொண்ட இருபது லட்ச ரூபாய் மதிப்பிலான 40 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு வழங்கியது..
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஆக்ஷன் எய்ட் என்ற அமைப்பின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கபட்ட இயந்திரங்களை அரசு மருத்துவமனை உதவி இருப்பிட மருத்துவர்(பொறுப்பு) பொன்முடி செல்வனிடம் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை உறுப்பினர் பி.ஆர் நடராஜன், மக்கள் இந்த கொரோனா தொற்றில் இருந்து முழுமையாக விடுபட தமிழக அரசின் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu