ஸ்டாலினிடம் நேரில் கொரோனா நிவாரண நிதி அளித்த சிறுமி

ஸ்டாலினிடம் நேரில் கொரோனா நிவாரண நிதி அளித்த சிறுமி
X

கோவையில், முதல்வர் ஸ்டாலினிடம் நிவாரண நிதி வழங்கிய சிறுமி.

கோவையில், லேப்டாப் வாங்க சேமித்த பணத்தை, முதல்வர் மு.க ஸ்டாலினிடம், 7-ம் வகுப்பு சிறுமி வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், இன்று ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 5 மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ஆய்வுக்கு பின், கோவை விமான நிலையத்திற்கு காரில் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலினை, கோவை சவுரிபாளையத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி நிவேதிதா என்பவர், கலெக்டர் அலுவலகம் முன்பு சந்தித்தார். அப்போது, லேப்டாப் வாங்குவதற்காக, தான் சேமித்து வைத்து இருந்த ரூ. 14,800-ஐ, கொரோனா நிதிக்காக, முதல்வர் மு.க ஸ்டாலினிடம் வழங்கினார்.

சிறுமி நிவேதிதா கூறுகையில், "சிறுவர்கள் பலர் தாங்களின் சேமிப்பு பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கி வந்தனர். இதனால், நானும் லேப்டாப் வாங்குவதற்காக சேமித்து வைத்து இருந்த பணத்தை, முதல்வரை நேரில் சந்தித்து வழங்கினேன்" என்றார்.

Tags

Next Story
ai marketing future