கோவையை இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன் : கமல்ஹாசன் வாக்குறுதி

கோவையை இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவேன் : கமல்ஹாசன் வாக்குறுதி
X
கோவையை இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவது தான் தனது ஆசை என்று கமல் ஹாசன் உறுதிபட கூறினார்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், இன்று காலை முதல் தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக வாகனப் பேரணியாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்.

சிவானந்தா காலனி பகுதியில் திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசிய கமல்ஹாசன், "கோவை தெற்கு தொகுதியின் முகமாக நான் இருப்பேன். ஒவ்வொரு வார்டுகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் முகம் இருக்கும். கோவையில் எனக்கான விலாசத்தை விரைவில் அறிவிக்க உள்ளேன்.

நான் ஒரு சினிமா நட்சத்திரம் என்பதை விட உங்கள் வீடுகளில் ஒரு சிறு விளக்காக எரிய ஆசைப்படுகிறேன். இங்கு உள்ள குப்பைகளை பொறுக்குவது பெரிய காரியமில்லை. அதனை 100 நாட்களுக்குள் செய்துவிட முடியும். கோவையை இந்தியாவின் நம்பர் ஒன் நகரமாக மாற்றுவது தான் தனது ஆசை. அதைச் செய்ய பிரதமர் தேவையில்லை. ஒரு எம்.எல்.ஏ செய்ய முடியும்" என அவர் தெரிவித்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!