நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் ஆர்ப்பாட்டம்
X

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி, திராவிட பண்பாட்டு கூட்டியக்கத்தினர் கோவையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

கோவையில், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, திராவிட பண்பாட்டு கூட்டியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டு, திராவிடர் பண்பாட்டு கூட்டியகத்தினர், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய பாஜக தடை போடுவதாகவும் குற்றம்சாட்டி, அதனை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பபட்டன. தமிழக அரசு இந்த ஆண்டு எந்த நுழைவு தேர்வும் இல்லாமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

திராவிட பண்பாடு கூட்டியகத்தில் உள்ள பல்வேறு அமைப்பினர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture