கோவையில் பயன்பாட்டுக்கு வந்த ஆக்சிஜனுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்

கோவையில் பயன்பாட்டுக்கு வந்த ஆக்சிஜனுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்
X

கோவை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம்

கடந்த இரண்டு தினங்களாக தினசரி தொற்று பாதிப்பில், தமிழக அளவில் கோவை முதலிடத்தில் இருந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் மாவட்டத்தில் 4734 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று பாதிப்பால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, கோவை அரசு மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட அனைத்து ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் அனைத்தும் நிரம்பிய நிலையிலேயே உள்ளன.

இதன் காரணமாக புதிதாக வரும் நோயாளிகளுக்கு ஜீரோ டிலே வார்டு மற்றும் ஆக்சிஜன் வசதி கொண்ட பேருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் நோயாளிகள் பலர் ஆம்புலன்சில் சிகிச்சைக்காக காத்திருக்கும் சூழல் இருந்து வந்தது.

இந்நிலையில் கோவை அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள 200 ஆக்சிசன் வசதி கொண்ட படுக்கைகளுடன் கூடிய கொரோனா சிகிச்சை மையம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மூச்சுத்திணறலுடன் வரும் புதிய நோயாளிகள் இந்த சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தற்போது வரை அரசு கலைக் கல்லூரியில் உள்ள சிகிச்சை மையத்தில் 18 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்திருக்கிறது.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings