கோவையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று; 2 பேர் உயிரிழப்பு

கோவையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று; 2 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

கோவையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவையில் நேற்றைய தினத்தை விட இன்று 5 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதேசமயம் பல நாட்களுக்குப் பிறகு தினசரி கொரோனா பாதிப்பில் சென்னை முதலிடம் பிடித்தது.

இதனால் கோவை இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. கோவையில் இன்று 229 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 31 ஆயிரத்து 863 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2259 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 203 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 27 ஆயிரத்து 403 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2201 ஆக அதிகரித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!