கோவையில் 282 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு

கோவையில் 282 பேருக்கு கொரோனா தொற்று - ஒருவர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 282 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது; ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

கோவையில் இன்று 282 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதன் மூலம், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 25 ஆயிரத்து 617 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 3779 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 408 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 19 ஆயிரத்து 730 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் இன்று ஒருவர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2108 ஆக உள்ளது. தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....