பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம்: மாட்டு வண்டியில் வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம்: மாட்டு வண்டியில் வந்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர். 

கோவையில், பெட்ரோல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, மாட்டு வண்டியில் வந்து காங்கிரசார் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து , தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் மயிரா ஜெயக்குமார் தலைமையில், கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகில் கோவை மாவட்ட காங்கிரஸார் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக பேருந்து நிலையத்தில் இருந்து மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த அவர்கள், மத்திய அரசிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். பெட்ரோல், டீசல், கேஸ் விலையை குறைக்க வேண்டும் என்று, அவர்கள் முழக்கமிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், சர்வதேச அளவில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வரும் நிலையில் மத்திய அரசு கலால் வரியை குறைக்கவில்லை. இதனால், அவற்றின் கடுமையாக உயர்ந்துள்ளது. விலை உயர்வை கண்டித்து கோவையில் வாகன ஓட்டிகளிடம் கையெழுத்து பெறப்பட்டு, கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார்.

Tags

Next Story
future of ai act