கோவை தெற்கு தொகுதி: பாஜகவிற்கு ஒதுக்க அதிமுகவினர் எதிர்ப்பு

கோவை தெற்கு தொகுதி: பாஜகவிற்கு ஒதுக்க அதிமுகவினர் எதிர்ப்பு
X

கோவை தெற்கு தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக அம்மன் அர்ச்சுணன் இருந்து வருகிறார். இவர் அதிமுக மாநகர மாவட்ட செயலாளராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் கோவை தெற்கு தொகுதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என பாஜக கேட்டு வருகிறது. கடந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட, அக்கட்சியின் மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து, கோவை பயணியர் விடுதி சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் அம்மன் அர்ச்சுணனுக்கு அத்தொகுதியை ஒதுக்க வேண்டும் எனவும், இல்லையெனில் அதிமுக நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்ய உள்ளதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai in future agriculture