பேரூராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திட எம்பி கோரிக்கை

பேரூராட்சி தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்திட எம்பி கோரிக்கை
X

கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன்  தலைமையில் மனு அளிக்கும் இயக்கம்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்த கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் எம்பி தலைமையில் சிஐடியூ அமைப்பினர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். முன்னதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஏராளமான தூய்மைத்தொழிலாளர்கள் பெருந்திரள் மனு அளிப்பு இயக்கத்தில் பங்கேற்றனர். அப்போது பேரூராட்சிகளில் சுய உதவி தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்களை நிரந்திரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் பணியாளர்களுக்கு ஈபிஎப், ஈஎஸ்ஐ, இன்சூரன்ஸ் வசதிகளை ஏற்படுத்த வேண்டும், சுய உதவிகுழு பணியாளர்கள் ஓய்வு பெறுகையில் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்தனர். கிராம ஊராட்சி தொகுப்பூதிய பணியாளர்கள், தூய்மை காவலர்களை காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். ஓஎச்டி ஆபரேட்டர்களுக்கு ஊதிய உயர்வு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் அரசு அறிவித்த கொரோனா ஊக்கத்தொகை உடனடியாக வழங்கிட வேண்டும். கொரோனா தொற்றில் மரணமடைந்த பணியாளர்களுக்கு இழப்பீடு, வேலைக்கு ஆட்களை எடுக்கும் பொழுது ஒப்பந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை, தள்ளுவண்டிக்கு பதிலாக பேட்டரி கார் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!