ஊக்கத்தொகை கேட்டு கோவை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ஊக்கத்தொகை கேட்டு கோவை மாநகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஊக்கத்தொகை வழங்கக்கோரி, கோவையில் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊக்கத்தொகை வழங்கக்கோரி, கோவை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் துப்புரவுத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டவுன்ஹால் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, துப்புரவு பணி செய்து வரும் சுகாதார துப்புரவு தொழிலாளர்களுக்கு தினமும் பல்ஸ் ஆக்சி மீட்டர் மற்றும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும், கையுறை, காலுறை உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்கள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும். கொரோனா தொற்றால் உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்களுக்கு 25 லட்ச ரூபாய் நிவாரணத்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று, வலியுறுத்தி முழங்கினர்.

அதேபோல், அனைத்து துப்புரவு பணியாளர்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும், இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!