கோவை கலெக்டராக சமீரன் பொறுப்பேற்றார்!

கோவை கலெக்டராக சமீரன் பொறுப்பேற்றார்!
X

கோவை மாவட்ட புதிய ஆட்சியர் சமீரன்

கோவை மாவட்ட புதிய கலெக்டராக, டாக்டர் சமீரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கொரொனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியராக இருந்து வந்த நாகராஜன் நிலநிர்வாக ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த சமீரன், கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று, மாவட்ட ஆட்சியராக டாக்டர் கீ.சு. சமீரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதுவரை ஆட்சியராக இருந்த நாகராஜன், பொறுப்புகளை புதிய ஆட்சியர் சமீரனிடம் ஓப்படைத்தார்.

புதிய ஆட்சியராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சமீரன், கோவை மாவட்டத்தில் கொரொனா தொற்றை கட்டுப்படுத்தும் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். கொரொனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முதலமைச்சர் எடுத்த சீரான நடவடிக்கையால் தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது என்றார்.

பெருந்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த பொதுமக்கள் அனைவரின் ஒத்துழைப்பு தேவை. தற்போது, மாவட்டத்தில் 30 ஆயிரம் தடுப்பூசிகள் கைவசம் உள்ளது. ஊரகப்பகுதிகளில் தடையின்றி தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.

Tags

Next Story