கோவை மாநகர காவலர்களுக்கு வார விடுமுறை - ஆணையர் உத்தரவு
கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தமோர்.
கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை தொடர்ந்து பணியாற்றுவதால் வேலை பளு ஏற்படுகிறது. இதன் காரணமாக மனம் அழுத்தத்தில் உள்ளதால் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும்,பொது இடங்களிலும் அவ்வப்போது கடுமையாக நடந்து கொள்கின்றனர். இந்த மன அழுத்தத்தை போக்கும் வகையில், கவலர்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் உள்ள காவலர்களுக்கு கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் மற்றும் திருமணநாளை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள தீபக் எம் தமோர் மாநகரில் உள்ள போலீசாருக்கு வார விடுமுறையை அறிவித்துள்ளார். இதன்படி உதவி ஆணையர்கள், ஆய்வாளர்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை எடுத்துக் கொள்ளவும், மற்ற காவலர்களுக்கு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் வார விடுமுறையை ஒதுக்கி அதற்கான அட்டவணையை தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu