கோவை ஆயுதப்படை பெண் போலீஸ் மர்மச் சாவு: போலீசார் தீவிர விசாரணை!

கோவை ஆயுதப்படை பெண் போலீஸ் மர்மச் சாவு: போலீசார் தீவிர விசாரணை!
X

தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் பெண் காவலர் மகாலட்சுமி.

கோவை ஆயுதப்படை பெண் போலீஸ் சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள கெஞ்சம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 25). இவர் கோவையில் ஆயுதப்படை காவலராக பணிபுரிந்து வந்தார். தன்னுடன் பணிபுரியும் சக காவலர் அருண் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு காவலர் அருண் தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரம் பெல் அடித்தும் அவர் எடுக்கவில்லையாம். இதனால், உப்பிலிபாளையம் காவலர் குடியிருப்பிற்கு காவலர் அருண் சென்று பார்த்த போது, காவலர் குடியிருப்பில் ஜன்னலில் கயிற்றை கட்டி முட்டி போட்டு உட்கார்ந்த நிலையில் மகாலட்சுமி இறந்து கிடப்பதை கண்டார்.

இதுகுறித்து போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். உடனடியாக அங்கு வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார், மகாலட்சுமியின் உடலை கைபற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வைத்தனர். மேலும், மகாலட்சுமி எதற்கான தற்கொலை செய்துகொண்டார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

வீட்டு ஜன்னலில் தூக்குப் போட்டு இறக்க வாய்ப்பில்லாத நிலையில், காவலர் மகாலட்சுமி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கோவை பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மகாலட்சுமி தற்கொலை செய்து கொள்ள கூடியவர் கிடையாது எனவும், தைரியமான பெண் எனவும் தெரிவித்த உறவினர்கள், காவலர் அருணை காதலித்த நிலையில் அருணின் பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமண பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது எனவும், அருண் தொடர்ந்து மகாலட்சுமியை திருமணம் செய்து கொள்வதாக தொந்தரவு செய்து வந்துள்ளார் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

பந்தய சாலை காவல் துறையினர் மகாலட்சுமி மரணத்தை முறையாக விசாரிக்க வேண்டும் எனவும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனையடுத்து போலீசார் மகாலட்சுமி மற்றும் அருண் ஆகிய இருவரின் செல்போன்களையும் வாங்கிவைத்துக்கொண்டு, ரேஸ்கோர்ஸ் போலீசார் தங்களது விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!