பாஜக ஊர்வலத்தில் மோதல் - காங்கிரஸ் வேட்பாளர் கண்டனம்

பாஜக ஊர்வலத்தில் மோதல் - காங்கிரஸ் வேட்பாளர் கண்டனம்
X
கோவையில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற ஊர்வலத்தின் போது, பா.ஜ.கவினர் வர்த்தகர்களை கடைகளை அடைக்க சொல்லியதால் மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் கண்டித்துள்ளார்.

கோவையில் உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் பங்கேற்ற பாஜக இரு சக்கர வாகன பேரணியின் போது டவுன்ஹால் பகுதியில் திறந்திருந்த கடைகளை மூடக்கோரி பாஜக தொண்டர்கள் கடைகளை அடைக்க கூறினர்.

அப்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டதில், கற்கள் வீசி தாக்கப்பட்டன. இச் சம்பவத்திற்கு தெற்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து வர்த்தகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினார்.

திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயகுமார் வர்த்தகர்களை நேரில் சந்தித்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் வர்த்தகர்களுக்கு எதிரான பாஜக வினர் செயலை கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags

Next Story