நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு

நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு
X
கோவை தெற்கு தொகுதியில் காட்டூர் போலீசார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காட்டூர் பகுதியில் கமல்ஹாசன் பரப்புரை செய்தார்.

அப்போது கடவுள் வேடமணிந்த நாடக கலைஞர்கள் வாக்கு சேகரித்தனர். இதுதொடர்பாக பழனிக்குமார் என்ற சுயேச்சை வேட்பாளர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் கமல்ஹாசன் மீது மக்கள் சட்டத்தின்படி காட்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!