கோவில்களில் திமுக எடுக்கும் நடவடிக்கைகள் சந்தேகத்தை உருவாக்குகிறது: வானதி சீனிவாசன்
கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் சிறப்பு பூஜை செய்த வானதி சீனிவாசன்.
கோவை தெற்கு தொகுதியின் புதிய சட்டமன்ற உறுப்பினராக, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கடந்த மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து தெற்கு தொகுதி எல் எல் ஏ அலுவலகத்தில் இன்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியதாவது: தமிழக அறநிலையத்துறை அமைச்சர், கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராக பயிற்சி அளிப்பது, பெண்களும் அர்ச்சகராக்குவது என்று சொல்லி வருகிறார். ஆனால் விஷ்வ ஹிந்து பரிஷத் நீண்ட காலமாக அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று சொல்லி வருகிறது. தமிழில் அர்ச்சனை தற்போது நடைபெற்று வருகிறது. பெண்கள் மேல்மருவத்தூர், மற்றும் சமுதாய கோவில்களில் பூஜை செய்து வருகின்றனர். இதில் தமிழக அரசு புதிதாக எதையும் செய்யவில்லை.
உச்ச மற்றும் உயர் நீதிமன்ற உத்திரவின்படி ஆகம கோவில்களில் ஆகம விதிப்படிதான் பூஜை செய்ய வேண்டும். இதில் பக்தர்களின் உணர்வு, கோவில் நிர்வாகத்தின் ஆலோசனை கேட்டு, அவர்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தி நடக்க வேண்டும். திமுக இந்துக்களுக்கும் , இந்து கடவுள்களுக்கும் எதிரானவர்கள் அல்ல என்று அதன் கூறுகின்றனர்.
அதேநேரம், இந்து சமய அறநிலையத்துறையில் தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தன்னிச்சையானதா, உண்மையானதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு உண்மையாகவே இந்து கோவில்களின் மீது அக்கறை இருந்தால் , கோவில் சொத்துக்ள், நிலங்களை இந்துக்கள் அல்லாதவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று வானதி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu