மேற்கு வங்க வன்முறை: கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
மேற்கு வங்க மாநில வன்முறை சம்பவங்களை கண்டித்து, கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தலைமையில், ஆர்.எஸ்.புரம் தெப்பக்குளம் மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு வங்க மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள், மற்றும் பொதுமக்களின் மீது தாக்குதல் நடைபெற்றதற்கும், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அடக்குமுறையை கையாள்வதாக கூறியும், இந்த கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில், மம்தா பானர்ஜியை கண்டித்து, பாஜகவினர் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தாக்குதலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களை நினைவு கூறும் வகையில், காயம்பட்ட பொதுமக்களை போல் வேடமணிந்து, ஆர்ப்பாட்டத்தில் கட்சியினர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், பெண் இனத்தையே கேவலப்படுத்தும் வகையில், மம்தா பானர்ஜியின் செயல்பாடு உள்ளது. இத்தகைய செயலை, அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் மத்திய அரசு இதற்கு தகுந்த பாடத்தை புகட்டும்" எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu